Sunday 25 September 2016

25-09-2016 மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம்

25-09-2016 மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம்    மாவட்ட தலைவர்                         திரு ரவீந்திரன் தலைமையில் 50 பெண்கள் உட்பட 280 ஓய்வூதியர்கள்       கலந்துகொண்ட சிறப்பான 78.2% IDA இணைப்பு வெற்றி விழா கூட்டமாக அமைந்தது.

இறைவணக்கதிற்குப்பின் தலைவர் தனது முன்னுரையில் நமது மாவட்டச்சங்க உறுப்பினர்கள் திருவாளர்கள்
 சுந்தரேசன் மாநிலத்துணைத்தலைவராகவும்
 வீராச்சாமி மாநில உதவிச்செயலரகவும்
 சந்திரன் (தேனீ) மாநிலஅமைப்புச்செயலரகவும் 
 தேர்வுற்றமைக்கு பாராட்டுகளையும் அவர்கள் பணிசிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.78.2% IDA இணைப்பு உத்தரவைபெற நமது மத்திய சங்கத்தின் அளப்பரிய பணியினையும் நமது மாவட்ட சங்கம் எடுத்த சிறப்பான முயற்சிகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
    செயலர் 28-06-2016 ல் நடைபெற்ற 12 மாவட்ட மாநாட்டு அறிக்கை சமர்ப்பிக்க அது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர் மாநில நிர்வாகிகளான திருவாளர்கள் சுந்தரேசன், வீராச்சாமி, சந்திரன் சிறப்புரையாற்றினர். 
  1. 1-1-2007க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் 78.2 % IDA உடன் கணக்கிடப்பட்டு  நமது மதுரை மாவட்ட நிர்வாகத்தால் தமிழ்நாடு வட்ட தொலைத்தொடர்புத்துறை முதன்மை கணக்கு அதிகாரிக்கு அனுப்பப்பட்டு விட்டது, எஞ்சியோருக்கு 15-10-2016 க்கு முன் அனுப்பட்டுவிடும் 
  2. தீபாவளிக்கு முன்னதாக பணப்பலன் கிடைக்க முயற்சி செய்யப்படும்
  3. நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்திற்கு அனுப்பப்பட இருக்கும் பிரச்சினைகள் குறித்த விவாதம் மாவட்ட மட்டத்தில் 15-10-20016 க்குப்பின் நடைபெறும்.
  4. 7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் பி எஸ் என் எல் லில் எவ்வாறு அமல் படுத்தப்படும் அதற்கு நம் முயற்சிகள் என்ன 

     என்ற தகவல்களை செயலர் தனது உரையில் குறிப்பிட்டார்.
     அமைப்பு நிலை விவாதத்தில் பல தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்.
           பொருளாளர் திரு ஜனார்த்தனன் நன்றிகூற கூட்டம் இனிது முடிவுற்றது.
கோவை மாநில மாநாட்டில் இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக்கொண்ட மாவட்டச்சங்கமாக நாம் தொடர்வதை பாராட்டுமுகத்தான் அளிக்கப்பட கேடயம் உறுப்பினர்கல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததது.
பொதுக்குழு கூட்ட புகைப்படங்கள் கீழே..








No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.